சர்வதேச சிறுநீரக மோசடி குழுவினருக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக இந்திய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட நால்வரை இந்திய பொலிஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.
சிறுநீரக மோசடியில் ஈடுபட்ட குறித்த நால்வரிடம் இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்தே, சம்பவம் தொடர்பில் இலங்கைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக இந்திய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
எனவே, இது குறித்து விசாரணை செய்வதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
சிறுநீரகங்களை தானம் செய்தவர்கள், கொழும்பிற்கு சென்று அங்குள்ள வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துள்ளனர் என்றும், விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்திய பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை,கடந்த வருடம் மார்ச் மாதம் விசா சட்டங்களை மீறி இலங்கையில் தங்கியிருந்த 8 இந்திய பிரஜைகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்களின் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் காரணமாக அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எட்டு பேரில் அறுவரின் சிறுநீரகங்கள் தலா ஒன்று வீதம் அகற்றப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்திருந்தார்.
பின்னர்,கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் அவர்கள் சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொண்டமை பின்னர் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.