தமிழ்நாட்டுக்கே பெருமை: நெகிழும் பன்னீர் செல்வம்

தமிழக சட்டசபை மண்டபத்தில் மறைந்த ஜெயலலிதாவின் உருவப்படத்தை ஜூலை மாதம் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்படுவதற்கு தமிழக எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, மக்கள் மன்றத்தில் மதிப்பிழந்தவர்கள் சட்டமன்ற மாண்பு பற்றி பேசுவதை நிறுத்த வேண்டும் என பன்னீர் செல்வம் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா படம் திறக்கப்படுவதால் சட்டமன்றம் மட்டும் அல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை.

தமிழகத்தை வளமாக்கிய ஜெயலலிதாவின் படம் எப்போது திறக்கப்படும் என மக்கள் காத்துக்கிடக்கின்றனர் என கூறியுள்ளார்.