முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் பலம் நாளுக்கு நாள் சரிந்து வருவதோடு, டெல்லி செல்வாக்கும் குறைந்து வருவதால், அவர் மகன் சசிகலா அணியுடன் ஐக்கியமாக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எழுந்த அதிகார போட்டி காரணமாக அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டு கடந்த மூன்று மாதமாக ஓபிஎஸ் தலைமையிலும், சசிகலா தலைமையிலும் செயல்படத் துவங்கியது.
இரு அணியாகப் பிரிந்து செயல்படத் துவங்கியதால் தக்க நேரம் பார்த்திருந்த பாஜக, தேர்தல் ஆணையம் மூலமாக அதிமுக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கம் செய்தது.
இந்த நிலையில் மணல் குவாரி தொழிலில் லாபம் பார்த்து வந்த பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரன், அரசியல் செல்வாக்கு எதுவும் இல்லாமல் தொழில் முடங்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் சசிகலா அணிக்கே திரும்ப வேண்டும் என முக்கிய நபர்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறாராம்.
இதனால் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கலக்கமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.