பிலிப்பைன்ஸ் இராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முடியும் என்று அந்நாட்டி ஜனாதிபதி ரோட்ரிகோ ட்யூட்டரெட்டின் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி சர்ச்சைக்கு பெயர் போனவர். அடிக்கடி ஏதேனும் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் விதமாக பேசி சிக்கிக்கொள்வார்.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை கடுமையாக திட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதன் பின் அதற்கு மன்னிப்பும் கோரினார்.
இந்நிலையில் இராணுவத்தினர் மத்தியில் பேசிய அவர், தீவிரவாதிகளை எதிர்ப்பதில் இராணுவத்தினருக்கு தாம் பக்கபலமாக இருப்பதாகவும், எவரையும் கைது செய்யவும், எந்த வீட்டையும் சோதனையிடவும் இராணுவத்தினருக்கு முழு அதிகாரம் உண்டு என்று தெரிவித்தார்.
வீரர்களின் திறனைக் குறிப்பிட்டு ஊக்குவிப்பதாகக் கருதிக்கொண்டு அவர்கள் ஒவ்வொருவராலும் 3 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது நகைச்சுவை மட்டுமே என்றாலும் ஒரு நாட்டின் பொறுப்பு மிக்க ஜனாதிபதியின் இத்தகைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.