ராம்குமாரை கொன்றது பொலிஸா? பரபரப்பை கிளப்பும் சுவாதி கொலை வழக்கு

தமிழகத்தையே உலுக்கிய மென்பொறியாளர் சுவாதியின் கொலை வழக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

தமிழகத்தின் சென்னையை சேர்ந்த மென் பொறியாளர் சுவாதி கடந்தாண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யபட்டார். பின்னர் சிறையில் அடைக்கபட்ட ராம்குமார் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

சுவாதி கொலை நடந்து ஒரு வருடம் ஆகவுள்ள நிலையில், இந்த கொலைக்கான காரணத்தில் மர்மம் உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

சாதி பிரச்சனை, கெளரவ பிரச்சனையால் இது நடந்திருக்கலாம் எனவும் இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை வைத்து சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது.

விஜய்காந்தை வைத்து உளவுத்துறை படத்தை இயக்கிய எஸ்.டி ரமேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சுவாதி வேடத்தில் ஆயிரா என்ற பெண்ணும், ராம்குமார் வேடத்தில் மனோ என்ற இளைஞரும் நடித்துள்ளனர்.

படத்தை பற்றி ரமேஷ் கூறுகையில், இந்த திரைப்படம் சுவாதி கொலை வழக்கை அடிப்படையாக கொண்டது.

கற்பனை கலக்காமல் இந்த படம் உருவாகியுள்ளது என கூறிய ரமேஷ், சுவாதி கொலை வழக்கில் இன்னும் விடை தெரியாத பல கேள்விகளுக்கு இந்த படத்தில் பதில் இருக்கும் என கூறியுள்ளார்.