சென்னை தி.நகரில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடம் அதிகாலை 4 மணி முதல் தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில் 15 மணி நேரத்துக்கும் மேலாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
ஏற்கனவே எந்நேரமும் கட்டிடம் இடிந்து விழலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் கட்டிடத்தின் 4வது தளத்தில் உள்ள முன்பக்க சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்ததுள்ளது.
தீ அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால், விரைவில் தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் அபாய நிலை கருதி யாரும் அருகில் செல்ல வேண்டாம் என எற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.