200 மில்லியன் டொலர் செலவில் தருவிக்கப்பட்ட வானிலை ஆய்வு சாதனங்கள் பொருத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வானிலை ஆய்வு கூறல்களை துல்லியமாக மேற்கொள்ளும் நோக்கில் டெப்லர் ராடார் சாதனங்கள் தருவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனங்களை திருத்தியமைத்து அதனை பொருத்துவதற்கு வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் கடந்த 2014ம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனைத்தை பொருத்த முயற்சித்த போது அது கீழே விழுந்து சேதமடைந்திருந்தது.
இந்த சாதனத்தை இலங்கைக்கு தருவிக்கும் போதும் முறைகேடுகள் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் குற்றச் சாட்டுக்கள் குறித்து இதுவரையில் விசாரணை நடத்தப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் காலநிலை மாற்றங்கள் மற்றும் அனர்த்தங்கள் தொடர்பில் துல்லியமாக முன்கூட்டியே எச்சரிக்கைகளை விடுப்பதில்லை எனவும் இதனால் அதிகளவு அழிவுகள் ஏற்படுவதாகவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.