தெற்கில் ஏற்பட்ட அழிவுகளுக்கு இதுதான் காரணம்?

அண்மையில் காலநிலை சீர்கேட்டினால் தெற்கில் கடுiமையான அழிவுகள் ஏற்பட்டிருந்தன.

மழை வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக அதிகளவில் உயிர் மற்றும் உடமைச் சேதங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின் போது சுற்றாடல் காரணிகளை கருத்திற் கொள்ளாமையே வெள்ள நிலைமை ஏற்படக் காரணம் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிக்கும் போது சுற்றாடல் குறித்த அறிக்கைகளை கவனத்திற் கொண்டிருந்தால் இந்தளவு வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருக்காது.

இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்ட போது கடந்த அரசாங்கத்தின் ஓர் அமைச்சராக நான் கடமையாற்றியதனை ஏற்றுக்கொள்கின்றேன்.

அரசாங்கமொன்றுக்கு அதிவேக நெடுஞ்சாலை அவசியமானது.எனினும் சுற்றாடல் காரணிகளை கருத்திற் கொண்டே இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் சுற்றாடல் காரணிகளை கருத்திற் கொண்டே அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.