டெல்லியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது

டெல்லி உட்பட வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.0-ஆக பதிவான நிலஅதிர்வு ஹரியானா மற்றும் வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது.

ஹரியானா மாநிலத்தின் ரோத்தக் மாவட்டத்தை மையமாக கொண்டு பதிவான இந்த நிலஅதிர்வு காலை 4.25 மணியளவில் பூமிக்கடியில் சுமார் 22 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக வளிமண்டலவியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

நிலஅதிர்வை தொடர்ந்து சேதங்கள், உயிரிழப்பு குறித்த உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.