112 நாட்டு ரசிகர்கள் மத்தியில் முதலிடம் பெற்ற இளையராஜாவின் ‘ராக்கம்மா கையத்தட்டு’!

அடி ராக்கம்மா கையத் தட்டு
புது ராகத்தில் மெட்டுக் கட்டு…
இளையராஜா இசையில் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிகாந்த் தோன்றி ஆடிப் பாடும் இந்தப் பாடலுக்கு இன்று வரை மவுசு குறையவே இல்லை.
ஆர்ப்பரிக்கும் வயலின்கள், அதிர வைக்கும் ட்ரம்ஸ்… இப்போது கேட்டாலும் துள்ளாட்டம் போட வைக்கும் இந்தப் பாட்டுக்கு இந்தியாவில் மட்டுமில்லை… உலகமெங்கும் ரசிகர்கள் உண்டு.

இதை நிரூபித்தது ஒரு கருத்துக் கணிப்பு. அதை பிபிசி நடத்தியது.
2002-ம் ஆண்டு லண்டன் பிபிசிக்கு 70வது ஆண்டு. இதனையொட்டி ஒரு சர்வதேச கருத்துக் கணிப்பு நடத்தியது. சர்வதேச அளவில் மிகப் பிரபலமான 100 பாடல்களைத் தேர்வு செய்து, வாக்கெடுப்புக்கு விட்டது.

112 நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் இதில் வாக்களித்தனர். அந்த வாக்கெடுப்பில் முதல் பத்து இடங்களைப் பிடித்த பாடல்களை 2002 டிசம்பர் மாதம் வெளியிட்டது.

அதிக வாக்குகளுடன் முதல் இடத்தைப் பிடித்த பாடல் இளையராஜாவின் ராக்கம்மா கையத் தட்டு…!
அந்தப் பட்டியல்…
1. ராக்கம்மா கையத்தட்டு – இளையராஜா
2. வீ டோன்ட் டாக் எனிமோர் – க்ளிஃப் ரிச்சர்டு
3.பிலீவ் – செர்
4.இமேஜின் – ஜான் லென்னன்
5 வந்தே மாதரம் – ஏ ஆர் ரஹ்மான்
6.பொஹிமியன் ரேப்ஸோடி – குயின்
7. சைய சைய – குல்சார் – ஏ ஆர் ரஹ்மான்
8. ஸ்டேர்வே டு ஹெவன் – லெட் ஸெப்ளின்
9. யெஸ்டர்டே – தி பீட்டில்ஸ்
10. ஹோட்டல் கலிஃபோர்னியா – தி ஈகிள்
ராக்கம்மா கையத்தட்டு பாடல் வெளியாகி 11 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த கருத்துக் கணிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.