இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோர் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, டெல்லியில் இருந்து சென்னை புறப்படும் முன்பு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சென்னை சென்று மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “கட்சியில் இருந்து யாரும் நீக்கவில்லை. நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு தான் அதிகாரம் உண்டு. சிறையில் இருந்த போது தமிழகத்தில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. யாரும் யாருக்கும் பணிந்து போக மாட்டார்கள். எல்லோருடனும் நட்புடன் தான் இருப்பார்கள்” என்றார்.
டிடிவி தினகரன் சென்னை திரும்பும் நிலையில் அதிமுக அணிகளிடையேயான பேச்சுவார்த்தை உள்ளிட்ட விவகாரங்களில் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது