யாழ்ப்பாணக் குடாநாட்டில் வெங்காயத்தின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பல வருடகால இடைவெளிக்குப் பின்னர் ஒரு அந்தர் வெங்காயம் 10 ஆயிரம் ரூபாவாக விற்கப்படுகின்றது.
வடமராட்சி கம்பர்மலைஇ புலோலிஇ அல்வாய் கெருடாவில்இ திக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து விதை வெங்காயத்துக்காக வலிகாமம் பிரதேச விவசாயிகளும்இ புத்தளம் பகுதி விவசாயிகளுக்கு வழங்கவென அந்தப் பகுதியைச் சேர்ந்த வெங்காய வியாபாரிகளும் போட்டி போட்டு வெங்காயத்தைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.
காலபோக வெங்காயச் செய்கையின் போது கடும் மழை பெய்தது. அதனால் பெரும் எண்ணிக்கையான பரப்பளவில் வெய்காயப் பயிர்ச்செய்கை முற்றாக அழிவடைந்தது.தப்பிப்பிழைத்த வெங்காயம் அறுவடையின் பின்னர் மிக உச்ச விலையை எட்டிப் பிடித்துள்ளது.
இருந்த போதும் மழையால் அழிவுற்ற வெங்காயப் பயிர்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.