அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினரால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் தெற்கிற்கு அனுப்பி வைப்பு

நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினரால் சேகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்று தெற்கு மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையின் தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை இழந்த மக்களுக்கு நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக    யாழ்ப்பாணம் மற்றும்  கிளிநொச்சி மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினரால் பொது மக்களிடமிருந்து அத்தியவசிய பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

அத்தியவசிய பொருட்களை கடந்த ஐந்து நாட்களாக பருத்தித்துறை, நெல்லியடி,
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், மல்லாகம், சுன்னாகம், கோப்பாய், சங்கானை, கரவெட்டி, காரைநகர், மானிப்பாய், ஊர்காவற்றுறை, சாவகச்சேரி மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளில் சேகரிக்கப்பட்டன.

பொது மக்களிடமிருந்து அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினரால் நேரடியாகச் சென்று மக்களிடம் சேகரித்த பொருட்களை இன்றையதினம் தரம்பிரித்து பாரஊர்திகள் மூலம் தெற்கு மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

IMG20170603155709IMG20170603160138IMG20170603160004IMG20170603155612