இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவத்தில் ஏராளமான, எளிய சிகிச்சை முறைகள், கைப்பக்குவங்கள் உள்ளன. அவற்றை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இடைவிடாத இருமலால் அவதிப்படுபவர்கள் அதிமதுரத்தைப் பொடியாக்கி கால் ஸ்பூன் பொடியைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
ஆடாதொடா இலையை இடித்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் இரண்டே நாளில் எப்படிப்பட்ட இருமலும் காணாமல் போய்விடும்.
குழந்தைகள் தொடர் இருமலால் அவதிப்பட்டால் பெருங்காயத்தை எடுத்துத் தண்ணீரில் கரைத்துக் கொடுத்தால் இருமல் உடனே நிற்கும்.
மஞ்சள்தூளுடன் சிறிது மிளகைப் பொடியாக்கிச் சேர்த்து இரண்டையும் காய்ச்சிய பசும்பாலில் கலந்து பனங்கற்கண்டு சேர்த்துக் கொடித்தால் இருமல் குணமாகும்.
முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடித்தால் நாள்பட்ட இருமலும் குணமாகும்.
ஒரு முழு எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து அதில் மூன்று ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் இருமல் குறையும்.
இருமலால் அவதிப்படுபவர்கள் அடிக்கடி உணவில் வெந்தயக் கீரையைச் சேர்த்துக் கொண்டால் இருமல் உடனே குணமாகும்.
இருமலால் அவதிப்படும் குழந்தைகளுக்கு கண்டங்கத்திரி வேரைச் சுத்தம் செய்து நன்றாக அரைத்து வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி அதில் கலந்து கொடுத்தால் இருமல் உடனே நிற்கும்.
கடுக்காய் மற்றும் சித்தரத்தை இரண்டையும் நன்றாக வறுத்துப் பொடியாக்கி இருமல் வரும்போது ஒரு சிட்டிகை அளவு வாயில் போட்டு அடக்கிக் கொண்டால் இருமல் உடனே நிற்கும்.
எலுமிச்சைப் பழச்சாறு, தேன் இரண்டையும் சம அளவு கலந்து சாப்பிட்டால் இருமல் சட்டென்று நிற்கும்.