வடக்கில் சேகரித்த பொருட்கள் தெற்கு மக்களிடம் கையளிப்பு

தென் பகுதியில் இடம்பெற்ற சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் நோக்குடன் வடக்கில் தமிழ்பேசும் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை வடமாகாண ஆளுநர் ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் கையளிக்கும் நிகழ்வு இன்று களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் ,சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் கட்சியின் வடமாகாணசபை உறுப்பினருமான அகிலதாஸ் சிவக்கொழுந்து மற்றும் மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியம் கோபாலகிருஷ்ணன் தினச்செய்தி ஆசிரியர் மு.வு இராசலிங்கம் ஆகியோர் இணைந்து களுத்துறை மாவட்ட மக்களுக்கு இரண்டு கோடி ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைத்தனர்.