இலங்கையின் தீவிரவாதம் வளர்வதற்கு இடமளிக்காது, போர் அற்ற நாட்டை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஒற்றுமை மற்றும் சமாதானத்தை ஏற்படுத்தி சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த இந்த அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வண. நேஹொட இந்தசார தேரரின் மத, சமூகசெயற்பாடுகளை பாராட்டிய ஜனாதிபதி, அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதுடன், பௌத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட நினைவு மண்டபத்தையும்திறந்து வைத்தார்.
இங்கு கருத்துரைத்த அவர்,
கடந்த மூன்று சகாப்த காலமாக கோரமான யுத்தம் இடம்பெற்றது. எனினும் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறுவதற்கு இந்த அரசாங்கம் இடமளிக்காது. பேரழிவுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்த அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்வின் போது, கொலை செய்யப்பட்ட தேரர்களை நினைவு கூர்ந்து நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தை ஜனாதிபதி பார்வையிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் மஹியங்கன ரஜ மகா விகாராதிபதி வண. உருலேவத்த ஸ்ரீதம்மரக்கித்த தேரர், அம்பாறை வித்யானந்த பிரிவெனாவைச்சேர்ந்த வண. கிரிந்திவெல சோமரத்ன தேரர் உள்ளிட்டதேரர்களும், அமைச்சர்களான தயா கமகே, ரஞ்சித்சியம்பலாபிட்டிய, பிரதி அமைச்சர்களான லசந்தஅழகியவன்ன, அனோமா கமகே, முன்னாள் அமைச்சர்பீ.தயாரத்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.