திமுகவை தொடர்ந்து வழி நடத்துவார் கருணாநிதி : ஸ்டாலின்!

உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வரும் கருணாநிதி விழாவில் பங்கேற்றால் நோய் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியதாலேயே அழைத்து வரவில்லை என்று ஸ்டாலின் கூறினார். உடல் நலம் தேறி வரும் கருணாநிதிஇ திமுகவை தொடர்ந்து வழி நடத்துவார் என்றும் கூறினார்.

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. வைர விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் செயல் தலைவர் என்ற முறையில் வரவேற்றார் மு.க.ஸ்டாலின்.

தொடர்ந்து பேசிய அவர்இ கருணாநிதியின் சாதனைகளை எடுத்துக்கூறினார். தமிழகத்தில் 19 ஆண்டுகாலம் முதல்வராக இருந்து சாதனை படைத்தவர் கருணாநிதி.

உலக வரலாற்றில் சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியே பார்க்காத தலைவர் கருணாநிதி. இந்த விழாவின் நாயகர் கருணாநிதி இங்கே இருந்திருக்க வேண்டும். அவரை எப்படியாவது அழைத்து வந்துவிட வேண்டும் என்று முயற்சி செய்தோம். ஆனால் பொது மேடையில் பங்கேற்றால் நோய் தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

உடல்நலம் தேறிவரும் நிலையில் விழாவுக்கு வந்தால் தொற்று ஏற்படும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். விழாவுக்கு வராவிட்டாலும் கருணாநிதி நம்மை வழிநடத்த வேண்டும் என்பதால் அவரை அழைத்துவரவில்லை.

திமுகவை தொடர்ந்து வழி நடத்துவார் கருணாநிதி. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே மிகப்பெரிய தலைவர் கருணாநிதி. இந்த விழாவிற்கு தேசிய அளவில் பல தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர் என்று கூறினார்.