திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்தநாளையொட்டி இன்று #HBDKalaignar94 ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்து டுவிட்டரில் டிரெண்டாகியது.
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைர விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், அவரது பிறந்தநாளையொட்டி அவருக்கு நேரில் வாழ்த்து சொல்ல திமுக தொண்டர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் #HBDKalaignar94 என்ற ஹேஷ் டேக்கில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலதரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று இரவு 12 மணி முதல் தற்போது வரை சமூக வலைதளங்களில் #HBDKalaignar94 ஹேஷ் டேக் முன்னிலை பெற்றிருந்தது. பல லட்சக்கணக்கானோர் இந்த ஹேஷ் டேகில், திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைர விழா வாழ்த்து, அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் திமுக ஆட்சிகால சாதனைகள் குறித்த பதிவுகளை டிவீட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ் டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்து இன்று டிரெண்டாகியது.
இதேபோல் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்ல வசதியாக இணையதள வசதியும் தொடங்கப்பட்டிருந்தது. இதனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். http://www.wishthalaivar.com என்னும் இணையதளம் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்வதற்காகவே செயல்பட்டு வந்தது.