சமூக வலைத்தளங்களில் இனவாதம் பரப்புவோர் மீது நடவடிக்கை

சமூக வலைத்தளங்களினூடாக இனவாதச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது குழுவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சமூக வலைத்தளங்களின் மூலமாக பல்வேறுபட்ட மதங்களைச் சாரந்த்தவர்களையும், இனங்களைச் சேர்ந்தவர்களையும் தூண்டுவிடும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டுவருகின்றனர்.

எனவே அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இது குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.