லண்டனில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது கோழைத்தமான செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற லண்டன் பிரிட்ஜில் நேற்று சென்று கொண்டிருந்த வான் ஒன்று தாறுமாறாக ஓடி பாலத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் பலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து தன்னுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, லண்டனில் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதலானது மிகவும் கொடூரமானதும், கோழைத்தனமானதுமாகும்.
லண்டன் மக்களோடு நாங்கள் துணை நிற்போம் என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.