அமைச்சர்களுக்கு மைத்திரி எச்சரிக்கை!!

படைவீரர்கள் அரச அதிகாரிகள் தொடர்பில் விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அரச அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் படைவீரர்கள் தொடர்பில் ஊடகங்களில் விமர்சனம் செய்யக் கூடாது என அவர் கோரியுள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் படையினரும் அரச அதிகாரிகளும் முனைப்புடன் செயற்பட்டனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே அவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.