பழங்களின் அரசன் என்று அழைக்கப்படும் மாம்பழங்கள் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.
* மாம்பழங்களில் வைட்டமின்கள் சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. அவை கெட்ட கொழுப்பை குறைப்பதற்கு துணைபுரியும்.
* வைட்டமின் ஏ மாம்பழத்தில் அதிகம் இருக்கிறது. கண்கள் வறட்சி அடைவதை தடுக்கும். பார்வை திறனை மேம்படுத்தவும் உதவும்.
* மாம்பழத்தில் நிறைந்திருக்கும் நார்சத்துக்கள் செரிமானத்தை எளிமைப்படுத்துவதற்கு உதவுகின்ன்றன.
* மாம்பழங்களில் காணப்படும் பீட்டா கரோட்டின் ஆஸ்துமா தோன்றுவதை தவிர்க்க வகை செய்யும்.
* முகப்பருக்களை போக்குவதற்கும் மாம்பழத்தை பயன்படுத்தலாம்.
* மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி தண்ணீர் கலந்து ஜூஸாக தயாரித்து பருகினால் உடல் குளிர்ச்சியடையும்.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாத உணவு களின் பட்டியலில் மாம்பழங்கள் உள்ளன. ஆதலால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவும்.
* மாம்பழத்தில் இருக்கும் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் ஆரோக்கியத்துக்கு வலுசேர்க்கின்றன.
* மாம்பழங்களில் இரும்பு சத்தும் உள்ளது. மாதவிலக்கு நிற்கும் 50 வயது பெண்களும், கர்ப்பிணிகளும் மாம்பழங்களை சாப்பிட்டு வருவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
* மாம்பழங்களில் உள்ள ஒருவகை நுட்பமான சத்துக்கள் புற்றுநோய்களுக்கு எதிராக உடலை பாதுகாக்க உதவுகின்றன என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.