சாம்பிராணி வெள்ளிக்கிழமைகளில் வீட்டையே மணக்கச்செய்யும் இதன் வாசனை. அதன் வாசனையும் புகையும் சூழலுக்கு இதம் தரும்.
மனதை நிதானப்படுத்தும். ஏதோ தீய சக்தி நாம் இருக்கும் இடத்தில் இருந்து விலகியதைப் போன்ற ஓர் உணர்வைத் தரும். சாம்பிராணி தூபமிடுதல், இன்றைய தலைமுறையினர் பலரும் அறிந்திருக்க முடியாத ஒன்று.
தூபமிடுதல் மிக அவசியம் என்கிறது ஆயுர்வேதம். தூபமிடுதலின் முக்கியத்துவம், அதை எப்படிச் செய்வது என்பது பற்றி பார்ப்போம்.
மனநிலையை இனிமையாக்கும் மணமான தூபம்
சந்தனத்தூள் – 72 கிராம்
கிச்சிலிக் கிழங்கு – 55 கிராம்
வெள்ளை குங்கிலியம் – 55 கிராம்
லவங்கம் – 15 கிராம்
ஜாதிக்காய் – 15 கிராம்
மட்டிப்பால் – 15 கிராம்
நாட்டுச்சர்க்கரை – 25 கிராம்.
செய்முறை
இவை அனைத்தையும் நன்றாகப் பொடி செய்து தலைக்குத் தூபமிடலாம். இது தலைமுடியில் நறுமணத்தை உண்டாகச் செய்யும்.
அருக தூபம்
அகில் கட்டை, சாம்பிராணி போன்ற மருந்துகளைச் சம அளவு எடுத்து பொடி செய்து புகைபோட்டு, தலைமுடிக்குக் காட்டலாம்.
தலையில் எண்ணெய் தேய்த்த பின்னர் மூலிகை நீர்கொண்டு தலையை அலச வேண்டும். நன்றாகத் துவட்டிய பின்னர், ராஸ்னாதி (ஆயுர்வேத மருந்துக்கடைகளில் கிடைக்கும்) சாற்றை உச்சந்தலையில் தேய்த்துக்கொள்ளலாம். இந்தச் சூரணத்தால் தலைவலி, கபநோய், கேச நோய் போன்றவற்றைத் தடுக்க முடியும்.
தூபமிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சளித் தொந்தரவு, தலைவலி, அதிகத் தும்மல், பொடுகு, பேன் தொல்லை, தலைமுடி உதிர்தல், மூக்கில் நீர்வடிதல், கேச நோய்கள் போன்ற தொந்தரவுகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.
ஆண், பெண், குழந்தைகள், முதியவர்கள் என வயது வரம்பின்றி அனைவரும் தூபம் போட்டுக்கொள்ளலாம்.