யாழ்ப்பாண மாவட்டசெயலகத்திற்கு முன்பாக முன்னாள் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று மாலை உண்ணாவிரத்தில் குதித்துள்ளார்.
குறித்த தமிழ் இளைஞன் கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸ் சேவையில் இணைந்து சாதாரண பொலிஸ் உத்தியோகத்தராக யாழில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றியுள்ளார்.
பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் .இன்று மாலை 6 மணியிலிருந்து குறித்த இளைஞன் தனது பொலிஸ் வேலையை மீண்டும் வழங்க கோரி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.