பிளாஸ்ரிக் பொலித்தீன் பாவனையை மாணவர்கள் மட்டத்திலிருந்து கட்டுப்படுத்தி எதிர்காலத்தில் பிளாஸ்ரிக் பொலித்தீன் அற்ற தேசமாக நாட்டை மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டார்.
உலக சு்ற்றுச்சூழல் தினமான இன்று கிளிநொச்சி பூநகரி எருமைத்தீவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தின நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்று மக்கள் மத்தியில் கலாசாரம் எனும் போர்வையில் பிளாஸ்ரிக்கினால் செய்யப்பட்ட ஆடம்பரப் பொருட்களை நுகரும் பழக்கம் அதிகரித்துச் செல்கிறது இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைவதுடன் மக்களிடையே இனம்தெரியான நோய்களும் பரவி வருகின்றன நாகரிகம் என்று கூறிக்கொண்டு பழமையான ஆரோக்கியம் தரும் பொருட்களின் பாவனைகளைக் குறைத்து ஆரோக்கியமற்ற சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை பாவனைக்கு உட்படுத்துவதனூடாக பாரிய நெருக்கடிகளை மனிதன் எதிர்நோக்குகின்றார் என்றார்.