நாம் அனைவரும் இயற்கையுடன் இயைந்து வாழ்வதற்கு மும்படையிரும் வெளியேற வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பதிபதிப்பிள்ளை தெரிவித்தார்.
உலக சுற்றுச்சூழல் தின நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தெரிவித்தவை வருமாறு,
எமது தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் கடற்கரைகள், இயற்கை மணல் வெளிகள், புல்வெளிகள், வனஜீவராசிகள் என பல வகை இயற்கைச் சூழல் காணப்படுகின்றது இவற்றை நாம் இயன்றளவு பேணிப்பாதுகாத்து வருகின்றோம்.
ஆனால் இவ் இயற்கைச் சூழலுடன் ஒட்டி உறவாடி வாழ்வதற்கு பாதுகாப்புக்களை காரணம் காட்டி மும்படையினர் இவ்விடங்ளை ஆக்கிரமித்திருப்பதனால் எம்மால் இயல்பாக இயற்கையுடன் இயைந்து வாழ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றார்.