பதில் வலயக்கல்விப் பணிப்பாளரின் நியமணம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதானால் வடமாகாண பிரதம செயலாளர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம்

பதில் வலயக்கல்விப் பணிப்பாளரின் நியமணம் தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதானால் வடமாகாண பிரதம செயலாளர் அவர்களுக்கு அனுப்பிய  கடிதத்தின் உள்ளடக்கம்

யோகசுவாமி  இரவீந்திரன் இலங்கை நிர்வாக சேவை S.L.E.A.S -II (சிரேஷ்ட அலுவலர்) அவர்களுக்கு கல்விப் பண்பாடு அலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இ ளைஞர் விவகார அமைச்சு 17.05.2017 திகதியிடப்பட்ட கோவை  இலக்கம்  NP/03/02/GA/1/18    கொண்ட கடிதம் அமைச்சின் செயலளர்சு. இரவீந்திரனால்  அனுப்பப்பட்டுள்ளது.  கௌரவ ஆளுனரின் உடனடிப் பணிப்பின் பிரகாரம் ,அவருக்கு கிளிநொச்சி பிரதிக் கல்விப் பணிப்பாளராக 22.05.2017 அன்று நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் வடமாகாண சபைக்கான முதல் தேர்தலில்  தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் அதிக பெரும்பான்மையுடன் வடமாகாண முதலமைச்சராக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மாகாண சபைக்குரிய அமைச்சுக்களுக்கான அமைச்சர்களையும் நியமித்தார். இங்கு நிர்வாகமானது முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் மேற்பார்வையின் கீழ் அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றது. 17.05.2017 திகதியிடப்பட்ட கடிதம் ஆளுனரின் பணிப்பின் பிரகாரம் யோ.இரவீந்திரனுக்கு அனுப்பப்பட்டமை விதிகளை மீறியுள்ளதாக தெரிகின்றது. வடமாகாண சபையின் பார்வையில் கௌரவ ஆளுனர் ஒரு அரசியல் நியமனம். அரசியல் சாசனப்படி இவர் வடமாகாணத்தின் ஜனாதிபதியின் பிரதிநிதி ஆவார்.

வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரிற்கு யோ.இரவீந்திரன் மேன்முறையீடு  செய்தார்  . தகுதி அடிப்படையில் அல்லது விசேட சேவைமூப்பு அடிப்படையிலும் இவருக்;கு முன்பு விசேட சேவை மூப்புக்குறைந்த அலுவலர் முன்னாள் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளராக 1999 முதல் 2017 வரை (18 வருடங்கள்) பணியாற்றியுள்ளார்.கௌரவ ஆளுனரின் பணிப்பின் பிரகாரம் வடமாகாண நிர்வாகத்தில் தலையிடுவது அரசியல் சாசனத்தை மீறும் செயலாகும். ஆகவே யோ.இரவீந்திரனின் மேன்முறையீடானது சுற்றுநிருபத்தின்படி விதிமுறைகளுக்கமைய கையாளப்படவேண்டிய விடயமாகும். இதற்கு எதிர்மாறான தீர்ப்புகள் மக்களை பாதிப்பதனால் வடமாகாணத்திற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் உள்ள National Integration and Reconciliation[தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லினக்கத்தினை]  ஐ பாதிக்கும் . அதற்கு அதிகாரிகளாகிய நீங்கள் உடந்தையாக இருக்கக்கூடாது.

கௌரவ ஆளுனருடன் சேர்ந்து உங்கள் நிர்வாக அலகை மக்களுக்கு விரோதமாக செயற்படுத்துவீர்களானால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி பிரதம செயலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை ஏற்படும். அந்த ஆர்ப்பாட்டத்தை நீதியான முறையில் எந்த தடையுமின்றி நடத்த உச்சநீதிமன்றில் உத்தரவை பெற்றுக்கொடுக்க நான் தயாராக உள்ளேன்.

மேற்குறிப்பிட்ட கடிதத்தில் உள்ள கௌரவ ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய இனி வருங்காலத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் ஏதும் தங்களுக்கு வழங்கப்படமாட்டாது என குறிப்பிடும் அதிகாரம் ஆளுனருக்கு  இல்லை. ஆகவே யோ.இரவீந்திரனின் மேன்முறையீட்டை சுற்றுநிருபப்படி நிர்வாகம் செய்யவேண்டியது தங்களின் கடமையாகும.