‘குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார் – முத்தையா மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மஹிமா நம்பியார், பூர்ணா, ‘ரேணிகுண்டா’ நாயகி சனுஷா உள்ளிட்ட மூன்று கதாநாயகிகள் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க உள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இப்படத்தை சசிகுமார் அவரது சசிகுமார் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்கவுள்ளார்.
இப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழு இதனை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், `மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இப்படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.