சோடா.. மதுவில் கலப்பதற்காகட்டும்,. தாகத்திற்காகட்டும். சோடாவை குடிப்பதில் இன்னமும் எல்லாருக்கும் தனி விருப்பமாக இருக்கிறது. ஆனால் சோடாவில் இருக்கும் காரணிகள் பலவித ஆபத்தான நோய்களுக்கு காரணமாக இருக்கிறது .
ஒரு நாளைக்கு 2 சோடாவை குடிக்கும் பழக்கம் இந்த கால இளைஞர்கள் ஒரு கலாச்சாரமாகவே பின்பற்றி வருகிறார்கள். இப்படி குடிப்பதானால் உண்டாகும் தீமைகளை காண்போம்.
சோடாவை தினமும் குடிப்பதால் 50% இதய நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து ஒருவருடம் சோடாவை குடித்தால் உடல் பருமன் இரட்டிப்பாகும் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சோடாவிலுள்ள மூலப்பொருட்களால் நரம்பு மண்டலம் விரைவில் பலமிழந்து போய்விடும். இதனால் நரம்புத் தளர்ச்சி உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
அடிக்கடி ரத்த அழுத்தத்தில் மாறுபாட்டை சோடா உருவாக்குவதால் அதிக காற்றாழுத்தத்தையும் உடலில் உருவாக்கும். இது தலைவலியை உண்டாக்கும். மைக்ரேன் உருவாகவும் சோடா காரணமாகும்.
சோடாவை தினமும் குடித்தால் முதுமையில் அல்சீமர் நோய்க்கு தள்ளப்படுவீர்கள் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் ஞாபக மறதி, மந்தத் தன்மை, வாய் குழறுதல் போன்றவை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.
அதிகப்படியாக செரடோனின் சுரப்பை தூண்டச் செய்வதால் ஒரு வித ஹைபர் நிலை உண்டாகும். நிம்மதியற்ற ஏதாவது செய்து கொண்டே இருக்கும்படியான ம நிலை உருவாகும்.
சோடாவை மதுவுடன் கலந்து குடிப்பவர்களுக்கு விரைவில் சர்க்கரை வியாதி உருவாகும். அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே சர்க்கரை வியாதி இருப்பவர்கள் சோடாவை தனியாக குடிக்கும்போது சர்க்கரையின் அளவு அதிகரித்து உடல் பாதிப்பு மோசமாகும்.
ஒரு நாளைக்கு இரு தடவை அல்லது அதற்கு மேல் சோடாவை குடித்தால் அடிக்கடி தலைசுற்றல், வாந்தி மயக்கம் ஆகியவை உண்டாகும். அது தவிர்த்து, குண நலன்களில் மாறுபாடு, ரத்த அழுத்த நோய்கள், வயிற்று வலி, உடல் வலி என பலவித பாதிப்புகளை உண்டாக்கும்.