சத்தான சுவையான பனிவரகு கார அடை

தேவையான பொருட்கள்  :

பனிவரகு – 250 கிராம்.
கடலைப்பருப்பு – 50 கிராம்.
துவரம் பருப்பு – 100 கிராம்.
காய்ந்த மிளகாய் – 10.
உப்பு – தேவையான அளவு.
சோம்பு – 3 ஸ்பூன்.
பெருங்காயம் – தேவையான அளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
நறுக்கிய வெங்காயம் – 1 கப்.
கறிவேப்பிலை, தேங்காய் துருவல் – அரை கப்.

செய்முறை :

* பனிவரகு, கடலைப்பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

* பின்னர் அந்த கலவையுடன் மிளகாய், சோம்பு சேர்த்து விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

* அரைத்த மாவில் உப்பு சேர்த்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.

* அடுத்து அந்த மாவு கலவையில் நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்

* சத்தான பனிவரகுக் கார அடை ரெடி.