பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கான சிகிச்சை முறை

முதுகு வலி என்பது நம்மிடையே காணப்படும் சர்வ சாதாரண சொல். 90 சதவீத மக்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலி அனுபவிக்காமல் இருந்திருக்க முடியாது.

முறையற்ற முறையில் பொருட்களை தூக்குவது, முறையற்ற முறையில் அதிக கனமான பொருட்களை தூக்குவது, கோணல் மாணலாக படுப்பது, தூக்குவது இவை பொதுவில் முதுகு வலிக்கான காரணங்கள்.

முதுகு தண்டு எலும்புகளுக்கு இடையே ஏற்படும் பாதிப்பு, சயாடிகா-இடுப்பின் கீழே பின் காலின் வழியில் ஏற்படும் வலி, மூட்டு வலி, எலும்பு தேய்மானம்,  முதுகு தண்டு வளைவு இவைகளின் காரணமாகவும் வலி ஏற்படலாம்.

பெண்களுக்கு ஏற்படும் கீழ் முதுகு வலிக்கு சில தனிப்பட்ட பரிசோதனைகளும் அதற்கேற்ற சிகிச்சை முறையும் தேவை.

* பெண்களின் பிறப்பு உள் உறுப்புகளில் ஏற்படும் பாதிப்பு காரணமாக முதுகு வலி ஏற்படலாம்.

* மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிடிப்பு காரணமாக கீழ் முதுகு வலி ஏற்படலாம்.

* நாற்காலியில் சரிந்து விழாமல் முதுகு தண்டுவடம் நேராய் இருக்கும்படி நிமிர்ந்து உட்காருங்கள். ஆனால் வெகு நேரம் இப்படி உட்காருவதும் முதுகு வலியினை ஏற்படுத்தும். ஆகவே அவ்வப்போது எழுந்து சிறிது நடங்கள்.

* அதிக தொப்பை உடையோர் முதுகு வலி பற்றி கூறுவர். ஆக அதிக தொப்பையை கண்டிப்பாய் குறைக்க வேண்டும்.

* அக்கு பஞ்சர் சிகிச்சை வலி நிவாரணத்தில் நல்ல பலன் அளிப்பதாகக் கூறப்படுகின்றது.

* அதிக நோய் மற்றும் தொடர்ந்து இருக்கும் இருமல் இவற்றால் ஏற்படும் கீழ் முதுகு வலி சிகிச்சை பெற்ற பின் நீங்கி விடும்.

* எலும்பினை பலவீனம் படுத்தும் சிலவகை மருந்துகளை நீண்ட காலம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

எப்போதும் சிலர் உடல் தசை வலி என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இதனை பாதிப்பவர் கூறும் அறிகுறிகளில் இருந்து மருத்துவர் முடிவு செய்வார். கழுத்து பிடிப்பு என்பர். ஆனால் எக்ஸ்ரேவில் எந்த பாதிப்பும் இருக்காது. இந்த தசை வலி எந்த உறுப்பையும், எந்த மூட்டினையும் பாதிக்காது. ஆனால் விடாத வலியும் சோர்வும் இருக்கும்.

* வலி, சோர்வு, தூக்கமின்மை, மனச்சோர்வு இவையெல்லாம் இதன் அறிகுறி ஆகும்.

* சில குறிப்பிட்ட இடங்களை அழுத்தும் போது வலி இருக்கும். 25-60 வயது உடையோர் அதிகமாக இதனைக் கூறுவர்.

* பரம்பரையும் காரணமாகலாம்.

* ஹார்மோன்களும், சில ரசாயன மாற்றங்களும் இதற்கு காரணம் ஆகின்றன. அதிக குளிர், குறைந்த (அ) அதிக உடல் உழைப்பு மனச்சோர்வு, குறைந்த தூக்கம் இதற்கு காரணம் ஆகின்றன. இதற்கான தீர்வு.

* சாதாரண வலி மாத்திரைகளை மருத்துவர் அளிப்பார்.

* முறையான உடற் பயிற்சி அவசியம் அதிக உடற் பயிற்சி கூடாது.

எட்டு மணி நேர தூக்கம் அவசியம்.
முறையான ‘மசாஜ்’ நன்மை பயக்கும்.
‘அக்கு பஞ்சர்’ முறை உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. முறையாய் பயின்ற வரிடம் செல்லவும்.
தீயானம் செய்யுங்கள். மன உளைச்சல் இன்றி இருங்கள்.
கண்டிப்பாக மேற்கூறிய முறைகள் உங்களுக்கு சிறந்த முன்னேற்றம் அளிக்கும்.