அமெரிக்காவில் பயங்கரம் : ஆறு பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் வேலை போன விரக்தியில் முன்னாள் ஊழியர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; பின் அந்த நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டான். கடந்த ஏப்ரலில் வேலையை விட்டு நீக்கப்பட்ட அந்த நபர் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. அதனால் தான் வேலை செய்த அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான்.