அதாபரம் ஸர்வபுராணகுஹ்யம்
நிஸ்ஸேஷபாபௌகஹரம் பவித்ரம்
ஜயப்ரதம் ஸர்வவிபத்ப்ரமோசனம் வக்ஷ்யாமி
ஸைவம் கவசம் ஹிதாயதே.
– ரிஷப யோகி அருளிய சிவகவசம்
பொதுப் பொருள் :
வஜ்ராயுதம் போன்ற கோர பற்கள் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, காலகூட விஷத்தைக் கழுத்தில் தரித்தவரே, பரமேஸ்வரா நமஸ்காரம். சத்ருக்களை அழிப்பவரே, ஆயிரம் கரங்களையுடையவரே, மிகுந்த உக்ரமான ரூபம் கொண்டவரே, உமாதேவியின் கணவரே, மகாதேவா, தங்களை என் இதயக் கமலத்தில் வைத்து வணங்குகிறேன்.