டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில், உட்கட்சி தேர்தல் அட்டவணைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி உட்கட்சி தேர்தல்கள் அக்டோபர் 15-ந் தேதி முடியும்.
அன்றைய தினம், துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமை ஏற்க வழிவிட்டு, காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி பதவி விலகுவார் என தகவல்கள் கூறுகின்றன.
கடந்த நவம்பர் மாதம் நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்டவர்கள் ராகுல் காந்தி தலைவர் ஆக்கப்படுவதற்கு ஆதரவான கருத்தை ஓங்கி ஒலித்தது நினைவுகூரத்தக்கது.
கடந்த 1998-ம் ஆண்டு சீதாராம் கேசரியிடம் இருந்து கட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய சோனியா காந்தி, கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் அந்தப் பதவியில் தொடர்ந்து கட்சி வரலாற்றில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.