சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போரில் பாதிக்கப்பட்டு ரத்தக்களறியுடன் வெளியேறிய சிறுவன் ஓம்ரானின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
வளைகுடா நாடான சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டம் நிகழ்த்தி வருகின்றனர். மேலும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினரும் அரசுப்படைகள் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்யாவும், அரசுப்படைகளுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கியுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அல்லப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்நகரில் வசித்து வந்த பலர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதில் 5 வயது சிறுவன் ஒம்ரானும் அடக்கம், படுகாயமடைந்து முகத்தில் ரத்தக்காயங்களுடன் அவர் ஆம்புலன்சில் அமர்ந்திருக்கும் படம் உலகமெங்கும் பரவி கல் நெஞ்சையும் கரைய வைத்தது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் ஓம்ரானின் 10 வயது சகோதரர் கொல்லப்பட்டார். இதனையடுத்து, ஓம்ரான் அரசின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறுவன் ஓம்ரானின் தற்போதைய புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகின்றது. இப்புகைப்படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.