பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் எல்லா தேர்தலையும் போல தனது நடுநிலையை நிரூபிக்க நாளைய பொது தேர்தலிலும் வாக்களிக்க மாட்டார் என தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவுக்கு பொது தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. மீண்டும் தெரசா மே பிரதமராவாரா அல்லது எதிர்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பிரதமர் ஆவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் மற்றும் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் எப்போதும் போல இந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிகிறது.
இதற்கு காரணம் ராஜ குடும்பத்தினர் தேர்தலில் தங்கள் நடுநிலையை கடைப்பிடிக்க வேண்டும் என நினைப்பது தான்.
அதிலும் முக்கியமாக எலிசபெத் மகாராணி நடுநிலை வகிக்க முக்கிய காரணம், எந்த அரசு அமைந்தாலும் அது அவரின் தலைமையிலான அரசாக தான் கருதப்படும்.
ஆனால், எலிசபெத் மகாராணி நினைத்தால் தேர்தலில் வாக்களிக்கலாம். அவர் வாக்களிப்பதை தடுப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை உரிமைகள் சட்டத்தின் கீழ் குற்றமாகும்.