ஞானசார தேரருக்கு ஆபத்து! பொங்கியெழும் பெங்கமுவ நாலக்க தேரர்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் நடவடிக்கைகள் குறித்து தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் உறுப்பினர் பெங்கமுவ நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்படும் நபர்களை கைது செய்யும் நோக்கில் புதிய சுற்றுநிருபம் ஒன்றை பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார்.

இன அல்லது மதக் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் செயற்படும் நபர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் அதிகாரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கும் வகையில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிருபத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுவோருக்கு பிணை வழங்கப்பட முடியாது.

நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் பத்தாண்டு காலம் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும்.

நபர் ஒருவர் செய்யும் சிறு தவறு சிறு வார்த்தையின் அடிப்படையில் கூட அவர்களை கைது செய்ய முடியும்.

ஞானசார தேரரை கைது செய்ய எடுக்கும் முயற்சி, பௌத்த பிக்குகளை ஒடுக்கும் நோக்கிலானது என பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார்.