நடிகர் விஜய்க்கு வருகிற ஜுன் 22-ந் தேதி பிறந்தநாள் ஆகும். விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவருடைய ரசிகர்கள் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலும் தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் விஜய் நடித்த ஹிட் படங்கள் பிரத்யேகமாக திரையிடப்படும்.
அந்த வகையில் இந்த வருடம் விஜய் பிறந்தநாளை உலக அளவில் கொண்டாடவுள்ளனர். விஜய் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் விஜய் நடித்த ஹிட் படங்கள் திரையிடப்படுகின்றன. அதேவேளையில், விஜய்க்கு தமிழகத்தை தாண்டி கேரளாவில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு. எனவே, கேரளாவிலும் விஜய் பிறந்தநாளையொட்டி பல்வேறு திரையரங்குகளில் விஜய் மாஸ் ஹிட் படங்களை திரையிடவுள்ளார்களாம்.
இந்தியாவைத் தாண்டி தற்போது ஆஸ்திரேலியாவிலும் பிரபல திரையரங்கில் விஜய்யின் மாஸ் திரைப்படங்களில் ஒன்றான ‘துப்பாக்கி’ படம் திரையிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஒரு நடிகரின் பிறந்தநாளின்போது ஆஸ்திரேலியாவில் அவருடைய படத்துக்கு ஸ்பெஷல் காட்சி ஏற்பாடு செய்வது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது.