இந்தி நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், நேபாள தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் 2010-ம் ஆண்டு காட்மாண்டுவில் திருமணம் நடந்தது. ஆனால் 2012-ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதுபற்றி கூறியுள்ள மனிஷா…
“திருமணம் பற்றி ஏதேதோ கனவு கண்டேன். ஆனால் எங்கள் உறவு மோசமான நிலையில் இருந்தது. எனவே, திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவது நல்லது என்று கருதினேன். அதில் எந்த வருத்தமும் இல்லை. அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு இது எனக்கு ஒத்து வராது என்பதை புரிந்து கொண் டேன். எனவே, பிரிந்தேன். இதில் யார் தவறும் இல்லை. இதற்கு நானே முழு பொறுப்பையும் ஏற்கிறேன். இது என் தப்புதான்.
என் வாழ்க்கை, என் வேலை நிம்மதியாக இருக்கிறது. இப்படியே வாழ்ந்து விட நினைக்கிறேன். இனி என் வாழ்வில் காதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. பிறகு பார்க்கலாம்.
நான் புற்று நோயுடன் போராடிய போது எனக்கு நெருக்கமானவர்கள் என்னை கண்டு கொள்ளவில்லை. நோயுடன் நான் போராடியதை பார்க்க விரும்பாததால் அவர்கள் வரவில்லை என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.