விருப்பங்களை நிறைவேற்றும் பெருமாள் ஸ்லோகம்

திவ்யாங்கதாஞ்சித புஜத்வய மங்களாத்மன்
கேயூபூரஷண ஸுஸோபித தீர்கபாஹோ
நாகேந்த்ரகங்கண கரத்வய காமதாயின்
ஸ்ரீவேங்கடேச மம தேஹி கராவலம்பம்

– ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

பொதுப்பொருள்:

திவ்யமான வளைகள் அலங்கரிக்கும் தோள்களைக் கொண்டவரே, வெங்கடேசா நமஸ்காரம். மங்களமான சரீரத்தை உடையவரே, ஆபரண அலங்காரத்தால் பிரகாசிக்கும் நீண்ட கரங்களை உடையவரே, அதே கரங்களில் சர்ப்பராஜனை கங்கணங்களாகத் தரித்திருப்பவரே, கோரிய அனைத்தையும் அருள்பவரே, வெங்கடேசா, நமஸ்காரம். என்னைக் கை கொடுத்துக் காத்தருள்வீராக.