அங்கஜன் இராமநாதனின் இளைஞர் அணியினரால் தெற்கில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவும் முகமாகவும் நல்லிணக்கத்தினை வெளிப்படுத்தும் முகமாகவும் வடமகணத்தில் மக்களிடம் நேரடியாக சென்று சேகரிக்கப்பட்ட பொருட்களும். அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் தனிப்பட்ட பங்களிப்பின் மூலமாகவும் வழங்கப்பட்ட பொருற்களும் 7/06/2017 இன்று மதியம் 12 மணியளவில் களுத்துறை மாவட்ட, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அவர்களின் ஊடக மக்களிற்கு சென்றடைவதற்கு கையளிக்கப்பட்டது
இவற்றில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உலர் உணவு பொருட்கள் ,மருந்து வகைகள் பால்மா,மற்றும் பாடசாலை மாணவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவரும் முகமாக பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும்.கையளிக்கப்பட்டன.