அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்திற்கு முன்னரும் அதற்கு பின்னரும் விண்வெளியிலிருந்து பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாத இறுதியில் 200க்கும் மேற்பட்டவர்களின் உயிரை பலியெடுத்த வெள்ளத்தின் தீவிரத்தன்மையை புகைப்படங்கள் வெளிக்காட்டியுள்ளன.
கடந்த 28ஆம் திகதி ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் Sentinel-2 செயற்கைக்கோளின் மல்டிஸ்பெக்ட் இன்ஸ்ட்ருமெண்ட் (MSI) என்ற கருவியினால் இந்த புகைப்படங்கள் பிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வெளியாகியுள்ள புகைப்படங்களில் பச்சை மற்றும் நீல நீறங்களில் வெள்ளத்தின் தாக்கம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே மாதம் பிற்பகுதியில் 48 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக, தென் மாகாணத்தின் மாத்தறை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது.
இந்த வெள்ளம் காரணமாக கிட்டத்தட்ட அரை மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
பெரு வெள்ளம் காரணமாக பல கிணறுகள் மற்றும் நீர் விநியோகங்களை அசுத்தமடைந்துள்ளன.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களுக்காக 12 நாடுகள் பொருட்கள் மற்றும் நிதியுதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.