யாழ். குடாநாட்டில் பலத்த காற்றுடன் மழை

கடந்த பல நாட்களாகக் கடும் வெப்பம் வாட்டியெடுத்து வந்த நிலையில் யாழ்.குடாநாட்டில் கடும் மழை பெய்துள்ளது.

யாழ்.குடாநாட்டின் பல்வேறிடங்களில் இன்று மாலை 05.45 மணியளவில் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்துள்ளது.

மணிக்குப் பல கிலோமீற்றர் வேகத்தில் தொடர்ச்சியாக வீசிய காற்றுக் காரணமாக சூறாவளி ஏற்படுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்பட்ட போதும் அவ்வாறான விபரீதம் ஏதும் நிகழவில்லை.

பலத்த காற்றுக் காரணமாக வலிகாமம் பகுதியின் பல்வேறிடங்களிலும் வாழைமரங்கள் குலையோடு முறிவடைந்து நிலத்தில் விழுந்ததாகத் தெரிய வருகிறது.

 

இந்த மழைவீழ்ச்சி சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக நீடித்ததுள்ளதுடன், கடும் மழை காரணமாக தாழ்வான இடங்களிலும், விவசாய நிலங்களிலும், வீதிகளிலும் வெள்ளநீர் தேங்கிக் காணப்படுகிறது.

மேலும், கடும் மழையால் கடந்த பல நாட்களாக நீடித்து வந்த கடும் வெப்பம் தணிவடைந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.