விக்னேஸ்வரன் ஞானசார தேரர் போல செயற்படவில்லை!

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அவரது தேவைகளை, கோரிக்கைகளை முன்வைக்க உரிமை இருக்கின்றது. அவர் ஞானசார தேரரைப் போன்று செயற்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்துரைக்கையில்,

இந்த சிறிய நாட்டில் ஞானசார தேரர் பொலிஸாரின் கண்களில் தென்படாமல் மறைந்திருப்பதாயின் அதுவும் ஒரு திறமை எனவும், இவ்வாறு மறைந்திருப்பதற்கு அமைச்சர்கள் யாருடையதாவது ஒத்துழைப்பு இல்லாதிருக்க முடியாது.

பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்துகின்றத வசனங்களை, ஞானசார தேரர் குற்றம்சாட்டும் நபர்கள் சிங்களவர்களுக்கு எதிராக எந்தவொரு மோசமான வார்த்தையையும் கூறியதில்லை.

ஞானசார தேரர் குற்றச்சாட்டும் எவரும் கடைகளுக்குத் தீ வைத்ததாகவோ, சமயத் தலங்களுக்கு தாக்குதல் நடாத்தியதாகவோ ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லை.

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அவரது தேவைகளை, கோரிக்கைகளை முன்வைக்க உரிமை இருக்கின்றது. அவர் ஞானசார தேரரைப் போன்று செயற்படவில்லை.

ஞானசார தேரர் கூறும் நபர்களை கைது செய்வதற்கோ விசாரணை நடாத்துவதற்கோ எந்தவிதத் தேவையும் இல்லை என்றார்.