அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! முதலமைச்சரிடம் வலியுறுத்தல்

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதுடன், அது தொடர்பில்வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரிய நடவடிக்கைகளைஎடுக்க வேண்டும். இவ்வாறு வடக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்தசுயாதீனக் குழு, தனது விசாரணை அறிக்கையை வடக்கு மாகாண முதலமைச்சர்சீ.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளது. அந்த விசாரணை அறிக்கையை சபையில் நேற்றுமுதலமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

இந்த விசாரணை அறிக்கை பொது வெளியில் முழுமையாக முதலமைச்சரால்பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்று வடக்கு சிவில் சமூகத்தைச் சார்ந்தஅதிபர்கள், மருத்துவர்கள், மனித உரிமை சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர்.

அத்துடன், அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைவாக உரிய நடவடிக்கைகளைமுதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தாமதமின்றி எடுக்க வேண்டும் என்றும் அவர்கள்வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த காலங்களில் பல்வேறு விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள்பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

மத்திய அரசால் மேற்கொள்ளப்படுகின்றவிசாரணைகளின் அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்தக் கோரும் வடக்கு அரசியல் தலைமைகள்,தம்மால் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கைகளைப் பகிரங்கப்படுத்த பின்நிற்கக்கூடாது என்றும் சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழு என்ற அடிப்படையில்,இந்தக் குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவது அவரது பொறுப்பே என்றும்அவர்கள் தெரிவிக்கின்றனர்.