பிராந்திய மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்க வசதியாக தனக்கு சொந்தமான தீவுக்கூட்டங்களை கணக்கிட இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது.
இந்தியப்பெருங்கடலில் சிதறிக்கிடக்கும் தீவுகளை கொண்ட நாடான இந்தோனேசியாவில் கடந்த 1996-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கின் படி 17,508 தீவுகள் இருந்தன. சுமார் 1.9 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவை தீவுகள் ஆக்கிரமித்துள்ளன. இதில் குறைந்த அளவிலான தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றனர். மற்ற தீவுகள் ஆளரவமற்று தான் காணப்படுகிறது.
மேற்கண்ட கணக்கும் குறிப்பிட்ட சில அம்சங்களை வைத்தே கணக்கிடப்பட்டன. மொத்தம் எத்தனை தீவுகள் இருப்பது என்பது தற்போது சரியாக யாருக்கும் தெரியாது. இந்நிலையில், தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தீவுக்கூட்டங்களை கணக்கிட அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
ஒவ்வொரு தீவுக்கும் சென்று அங்குள்ள வளங்களை கணக்கெடுத்து அதை பாதுகாப்பது குறித்த முடிவுகளை எடுக்க உள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.