நாட்டின் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாட்டின் 13வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிவதற்கு 60 நாட்களுக்கு முன்பாக புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதன்படி குடியரசுத் தலைவர் நடப்பட உள்ளது. டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நசீம்ஜைதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17ம் தேதி நடைபெறும்; ஜூலை 20ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.