உடலில் பித்தத்தை குறைக்கும் திரிகடுகம் காபி

தேவையான பொருட்கள் :

மிளகு – 30 கிராம்
சுக்கு – 50 கிராம்
திப்பிலி – 5 கிராம்
கருப்பட்டி – தேவையான அளவு
காபி தூள் – 2 ஸ்பூன்

செய்முறை :

* மிளகு, சுக்கு, திப்பிலி ஆகியவற்றை நன்றாக பொடித்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் கருப்பட்டியை போட்டு கரைந்த பின்னர் காபி தூள், திரிகடுகம் பொடி சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி மூடி வைக்கவும்.

* தூள் தெளிந்தபின்னர் வடிகட்டி சூடாக பருகவும்.

* திரிகடுகம் காபி ரெடி.

* இதை பால் சேர்க்காமல் அருந்த வேண்டும். காலை – மாலை இரு வேளை குடிப்பது நல்லது.