உள்ளூராட்சி மன்றத் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் விரிவான போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் தொடர்ந்தும் தேர்தலை ஒத்தி வைத்து வருகின்றது, அரசாங்கத்தை தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தும் விரிவான போராட்டங்கள் நடத்தப்படும்.
இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானம் எடுக்கப்படும்.
அண்மையில் நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக, இந்தப் போராட்டம் தற்காலிக அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் கடந்துள்ளன.
தேர்தல்களை ஒத்தி வைப்பது மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் செயலாகும்.
வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து இது குறித்து தெளிவுபடுத்தும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.