பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க விஜயத்தில் ஈடுபட்டுள்ள பிரதமரை, ஜப்பான் விஜயத்தில் ஈடுபட்டுள்ள மஹிந்த அவசர தொலைபேசி அழைப்பொன்று மேற்கொண்டுள்ளார்.
இதன்போது வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு மஹிந்த, ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
கட்டாரில் வாழும் இலங்கையர்கள் சிலர் இது தொடர்பில் தன்னிடம் கோரிக்கை முன்வைத்ததாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கைக்கு அமைய மஹிந்த, பிரதமரிடம் கேட்டு கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ரணிலின் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார் என தெரியவந்துள்ளது.